அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.

இஸ்லாமிய நிதிச் சேவை

அல் ஜபால் – மேம்படுத்திய மாற்றுவழி நிதிச் சேவையில் உங்கள் விருப்பத்தேர்வுப் பங்காளி.

அர்ப்பணிப்புமிக்க அலுவலர்கள் அணியின் உதவியுடனும் தகைமை பெற்ற தொழிற்றுறை அறிஞர்களின் வழிகாட்டுதலுடனும் நாம் நெறிமுறையான நிதிச் சேவையை வலுவான வியாபாரத் திறமையுடன் இணைத்து வழங்குகின்றோம்.

AMF இஸ்லாமிய நிதித் திட்டங்கள்

முதலீட்டுத் திட்டம்

வகாலா முதலீட்டுக் கணக்கு, நிலையான அல்லது கால வைப்புக்குப் பதிலான ஒரு மாற்றுவழித் திட்டமாகும். முதலீட்டு வருமானம் மற்றும் நிதிப் பாதுகாப்பைத் திட்டமிடுவதற்கான ஒரு வழியை அது முதலீட்டாளருக்கு வழங்குகின்றது.

அது செயற்படுவது எப்படி

வகாலா என்பது பிரதானிக்கும் முகவருக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தம். இந்த முதலீடுகள் AMFஇன் செயற்பாட்டிற்குள் இடம்பெறும் ஷரிஆவுக்கு அமைவாக இலாபமீட்டும் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்பட்டு முதலீடு செய்யப்படுகின்றன.

சிறப்பம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

நிதியுதவி விருப்பத்தேர்வுகள்

“இஜாரா” நிதியுதவியானது நீங்கள் தெரிவு செய்யும் வாகனத்தைக் கொள்வனவு செய்து, அதன் நன்மை முழுவதையும் நீங்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் அதனை உங்களுக்கே வாடகைக்கு வழங்கும். ஒப்புக்கொள்ளப்பட்ட வாடகைக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டதும் வாகனத்தின் உரிமை உங்கள் பெயருக்கு மாற்றப்படும்.

முராபஹா / வர்த்தக நிதி

முராபஹா நிதியுதவியானது வாடிக்கையாளரின் சார்பில் உற்பத்திப் பொருளைக் கொள்வனவு செய்து, அப் பொருளை அதே வாடிக்கையாளருக்கு மீள விற்பனை செய்யும். அவ் வேளையில், பொருளை வாங்குவதற்கு ஏற்பட்ட செலவும் அதனை மீள விற்பனை செய்யும்போது சேர்க்கப்படும் இலாபம் அல்லது மிகை விலையும் தெளிவாகக் குறிப்பிடப்படும். (பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்புடையதாகும்)

ஷரிஆ மேற்பார்வைச் சபையின் அங்கத்தவர்கள்

எம்முடன் தொடர்புகொள்ளுங்கள் (இஸ்லாமிய நிதிப் பிரிவு)