“எங்கள் கதை – எமக்காக வேலை செய்யும் மக்கள் மற்றும் எம்முடன் வியாபாரம் செய்யும் மக்களின் அடித்தளத்திலேயே எமது கம்பனி கட்டியெழுப்பப்பட்டுள்ளது”

~ ஹார்வி எஸ். ஃபயர்ஸ்டோன்

நாம் செய்வது

AMFக்கு உங்களை வரவேற்கிறோம். லீசிங் மற்றும் வாடகைக் கொள்வனவு, நிலையான வைப்புகள், சேமிப்பு, இஸ்லாமிய நிதி போன்ற பல்வேறு தீர்வுகள் தொடர்பில் வாடிக்கையாளர்களின் மிகச் சிறந்த திருப்தியை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல கவர்ச்சியான திட்டங்கள் எம்மால் வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப வடிமைக்கப்பட்ட மிகச் சிறந்த வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நாம் முயற்சி செய்கின்றோம்.

எமது நோக்கு

 உங்கள் நிதித் தேவைகளுக்கு நம்பிக்கையான பங்காளியாக விளங்குதல்.

எமது பணி

பங்குதாரர் பெறுமதியின் அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்ற வலுவூட்டும் மற்றும் பயனுறுதியான தொழிற் கலாசாரச் சூழலில், பன்முகத் தன்மையுள்ள மற்றும் புத்தாக்கமான நிதிச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் மிகச் சிறந்த நிதிச் சேவைகளின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு ஓர் உறுதியான அத்திவாரத்தை வழங்குதல்.

எமது விழுமியங்கள்

நன்கு ஸ்தாபிக்கப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வழிகோலும் பொருட்டு, ஒவ்வொருவரும் நிதி ரீதியாக வளர்ச்சியடைவதற்கு இடமளிக்கும் எதிர்காலம் ஒன்றில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அசையாத நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உதவும் வகையில் அதிசிறந்த நிதித் தீர்வுகளை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், தக்க தருணத்தில் பதில் நடவடிக்கை எடுக்க AMFஇலுள்ள நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.