Associated Motor Finance Company PLC

இயக்குநர்கள் குழு

திரு. சுரேன் குணவர்தன

நிர்வாக இயக்குனர் மற்றும் சுயாதீன இயக்குனர்

திரு. சுரேன் குணவர்தன பல்வேறு தொழிற்றுறைகளில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான நேரடி அனுபவத்தைக் கொண்டவர். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மூலோபாயத் திட்டமிடல், நிறுவன மறுசீரமைப்பு, முதலீடு/கடன் முகாமைத்துவம், நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை. பொது முகாமைத்துவம், வியாபார ஆலோனைச் சேவை ஆகிய துறைகளில் அவர் நிபுணத்துவ அறிவைக் கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபாரக் கணக்கியல் பட்டத்தைப் பெற்றுள்ள அவர், ஐக்கிய இராச்சியத்தின் சந்தைப்படுத்தல் பட்டய நிலையத்தின் சிறப்பு உறுப்பிளர் மற்றும் டிப்ளோமா பட்டதாரியும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சான்றிதழ் பெற்றுத் தொழில்புரியும் கணக்காளர்கள் சங்கம், இலங்கைச் சநதைப்படுத்தல் நிலையம் ஆகியவற்றிலும் அவர் அங்கத்துவம் வகிக்கின்றார். 

இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்த அவர், இலங்கையிலுள்ள இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவராகவும் கடமையாற்றியுள்ளார். திரு. சுரேன் குணவர்தன 31 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விரிவான மற்றும் பல்வகைத் தன்மையான தொழில் அனுபவத்தைக் கொண்டவர். பொது முகாமைத்துவம், மூலோபாய மறுசீரமைப்பு, முதலீடுகள்/கடன் முகாமைத்துவம். நிதி, சந்தைப்படுத்தல்/விற்பனை. செயற்பாடுகள், வியாபார ஆலோசனை ஆகிய துறைகளில் அவர் முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.   

திரு. சுரேன் குணவர்தன, பல்வகைச் செயற்பாடுகள் கொண்ட கூட்டு நிறுவனமாகிய லஙகெம் சிலோன் பி.எல்.சி.யின் முகாமைப் பணிப்பாளராகச் செயற்படுகின்றார். பார்தி எயார்டெல் லங்கா லிமிட்டட்டின் தவிசாளர் மற்றும் முகாமைப் பணிப்பாளர், டயலொக் டெலிவிஷன் மற்றும் நிலையான தொலைபேசிச் சேவைகளின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, லங்கா பெல் லிமிட்டட்டின் குழும முகாமைப் பணிப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவர், சிலோன் ஷிப்பிங் கோப்பரேஷன், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. ஆகியவற்றின் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்சமயம் அவர் First Guardian Equities Limited மற்றும் Dawi இன்வெஸ்ட்மன்ற் ட்ரஸ்ட் (பிறைவேட்) லிமிட்டட்டின் சபைகளில் அங்கம் வகிக்கின்றார்.

திரு. ஜே.பி.ஐ. நாலத தயாவன்ச

பிரதித் தவிசாளர் / நிறைவேற்றுப் பணிப்பாளர்

திரு. ஜே.பி.ஐ. நாலத தயாசன்ச, ஜேர்மனியின் ஸ்டுட்காட்ர்டில் வாகனப் பொறியியல் டிப்ளோமாவைப் பெற்றிருப்பதோடு மாத்திரமன்றி Dimo, Mercedes Benz AG மற்றும் Bosch GmbH  பயிலுநராகவும் இருந்துள்ளார். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் வாகனப் பொறியியலில் விரிவான பயிற்சிகளைப் பெற்ற அவர் இத் துறையில் பரந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளார். 1983ஆம் ஆண்டில் இம்பீரியல் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் (பிறைவேட்) லிமிட்டட் என்ற தனது சொந்தத் தொழில் முயற்சியை ஆரம்பித்த அவர், பயன்படுத்தப்பட்ட தரமுயர்ந்த கார்களின் இறக்குமதியில் முன்னோடியாக விளங்கினார். இந்த நிறுவனம், ஐக்கிய இராச்சியத்திலிருந்து பண்ணை இயந்திரங்கள், மண் அகழ்வு இயந்திரங்கள் மற்றும் பாரிய பொறியியல் சாதனங்களையும் இறக்குமதி செய்தது.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள லண்டன் ஸ்கூல் ஒப் இக்கொனொமிக்ஸ் அன்ட் மனேஜ்மன்ற் வழங்கிய பொருளியல் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா ஒன்றையும் திரு. தயாவன்ச பெற்றுள்ளார். அசோஷியேட்ட்ட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி. சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவராக 1982ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர், அவரது தகப்பனாராகிய திரு. ஜே.பி.ஐ. பியதாச அவர்களின் மறைவையடுத்து கம்பனியின் தலைவர் மற்றும் முகாமைப் பணிப்பாளராக பதவியேற்றார்.  

நிதி, ஹோட்டேல் மற்றும் சுற்றுலா, ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி-இறக்குமதி போன்ற பல தொழிற்றுறைகளில் திரு. தயாவன்ச 36 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். தற்சமயம் அவர் Poltech (சிலோன்) லிமிட்டட்டின் தவிசாளர் மற்றும் முகாமைப் பணிப்பாளராகவும் இம்பீரியல் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் (பிறைவேட்) லிமிட்டட்டின் தவிசாளர் மற்றும் முகாமைப் பணிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.

திரு. ஜனாப் ரி.எம்.ஏ. சாலி

நிறைவேற்றுப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி

ஜனாப் சாலி, ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்கள் பட்டய நிலையம் (FCMA), சாட்டர்ட் குளோபல் மனேஜ்மன்ற் அக்கவுண்டன்ற் (CGMA) ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினராகவும் அவுஸ்திரேலியாவின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிலையத்தின் (CMA) முழுத்  தகைமை பெற்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். ஐக்கிய இராச்சியத்தின் சந்தைப்படுத்தல் பட்டய நிலையத்தின் (FCIM) சிறப்பு உறுப்பினராகவும் இருக்கும் அவர், மலேசியாவிலுள்ள ஏஷியா பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபாரத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஜனாப் சாலி, ஒரு நிதித் துறை நிபுணராவார். நிதி, கணக்காய்வு, சந்தைப்படுத்தல், கடன் வழங்கல், கடன் மீட்பு, வேலைத்திட்ட நிர்வாகம், நிகழ்ச்சி முகாமைத்துவம் ஆகியவற்றில் அவர் 34 வருடங்களுக்கு மேற்பட்ட விரிவான மற்றும் பல்வகைப்பட்ட தொழில் அனுபவத்தைக் கொண்டுள்ளார். பல நிறுவனங்களில் பல்வேறு மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பதவிகளை அவர் வகித்துள்ளார். நிதி, சுற்றுலா, உடல்நலப் பராமரிப்பு. சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாடு, தொடர்பாடல்கள், வாத்தகம், உற்பத்தி போன்ற வெவ்வேறுபட்ட துறைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். 

ஜனாப் சாலி, 1997ஆம் ஆண்டில் குழுமக் கணக்காளராக அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யில் இணைந்தார். 2003ஆம் ஆண்டில் பொது முகாமையாளராகவும் 2011ஆம் ஆண்டில் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளராகவும் அவர் பதவியுயர்வு பெற்றார். 2014 டிசெம்பர் தொடக்கம் ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சியில் பணிப்பாளராகப் பதவி வகித்த ஜனாப் சாலி, 2021 ஏப்பிரல் 1ஆம் திகதி முதல்  AMF சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.   

திரு. ஜே.பி.ஐ. ஷானில் தயாவன்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

திரு. ஜே.பி.ஐ. ஷானில் தயாவன்ச, ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து கணக்கியல் மற்றும் முகாமைத்துவப் பட்டம் (BA) ஒன்றையும்   அவுஸ்திரேலியா, மெல்பேர்னிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திடமிருந்து சர்வதேச வியாபாரத் துறையில் முதுமாணி பட்டம் (MA) ஒன்றையும் பெற்றுள்ளார். இந்த இரு தகைமைகளும் நிதி மற்றும் வியாபார முகாமைத்துவத்தில் கவனம் செலுத்துகின்றன.  

அவர் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கம்பனியின் நிறுவன ஆளுகையை முன்னேறுவதற்கும் நிதி மற்றும் கணக்கியல் விடயங்ளைப் பலப்படுத்துவதற்கும் இளைய தலைமுறையினரைச் சபையில் சேர்த்துக்கொள்ளும் முகமாகவே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

திருமதி ஏ.எஸ். தயாவன்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

திருமதி ஏ.எஸ். தயாவன்ச, 1995ஆம் ஆண்டில்  அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் சபைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தவிர, ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பொதுக் கம்பனியான  Poltech (சிலோன்) லிமிட்டட், ஐக்கிய இராச்சியத்திலிருந்து பயன்படுத்திய வாகனஙகைளை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனமான இம்பீரியல் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பனி (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்  பணிப்பாளர்கள் சபையிலும் அவர் இடம்பெறுகின்றார்.  

வசதி படைத்த பிரிவினருக்கென  பிரத்தியேகமான ஆடைகளை விற்பனை செய்யும் அயத்தி நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளராகவும் இருக்கும் திருமதி தயாவன்ச நிதி, தைத்த ஆடைகள் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதித் துறைகளில் 22 ஆண்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

திரு. நிலங்க பீரிஸ்

நிர்வாகப் பொறுப்பற்ற சுயாதீனப் பணிப்பாளர்

திரு. நிலங்க பீரிஸ் ஒரு நிதித் துறை நிபுணர். நிதித் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு, நிதிக் கணக்காய்வு, கடன் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம், வியாபார அபிவிருத்தி மற்றும் பகுப்பாய்வு. தகவல் தொழில்நுட்பம், வேலைத்திட்ட முகாமைத்துவம். கட்டமைப்பு வசதிச் செயற்பாடுகள் ஆகிய துறைகளில் 30 ஆண்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் இலங்கை வங்கியாளர்கள் நிலையம், இலஙகைக் கடன் முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினராகவும் முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிலையத்தின் துணை உறுப்பினராகவும் பட்டயம் பெற்ற குளோபல் முகாமைத்துவக் கணக்காளராகவும் இலங்கை பணிப்பாளர்கள் நிலையத்தின் உறுப்பினராகவும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து பட்டய நிலையத்தின் பட்டயம் பெற்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். 

செலான் வங்கியில் தனது வங்கித் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திரு. பிரிஸ், அதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஜனவரியில் நிர்வாகப் பொறுப்பற்ற ஒரு சுயாதீனப் பணிப்பாளராக ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் பணிப்பாளர்கள் சபையில் இணைந்தார். 2019ஆம் ஆண்டில் சிரேஷ்ட பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், 2021 ஜனவரி வரை இப் பதவியை வகித்தார்.  கணக்காய்வுக் குழு, ஒருங்கிணைந்த இடர் குழு, தொடர்புடைய தரப்புக் கொடுக்கல் வாங்கல்கள் குழு ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றினார். மக்கள் வங்கியின் நிர்வாகப் பொறுப்பற்ற சுயாதீனப் பணிப்பாளராகவும் பதவி வகித்த அவர், அங்கு கணக்காய்வு, இடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுக்களின் தலைவராகக் கடமையாற்றியதுடன், கடன் குழுவின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

திரு. பிரிஸ் தற்சமயம் அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் நிர்வாகப் பொறுப்பற்ற சுயாதீனப் பணிப்பாளராக இருக்கின்றார். வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிச் சேவைப் பதவிகளைத் தவிர, வசதி வழங்கும் தொழிலில் இலங்கையின் மிகப் பெரிய மென்பொருள் அபிவிருத்தி நிறுவனமாக விளங்கும் Gensoft (பிறைவேட்) லிமிட்டட்டின் முகாமைப் பணிப்பாளர், இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தகவல் பாதுகாப்பு நிறுவனமாகிய Black Hat Force (பிறைவேட்) லிமிட்டட்டின் பணிப்பாளா ஆகிய பதவிளையும் அவர் வகிக்கின்றார். கல்விக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும் செயற்படுகின்றார்.

இலங்கை கடன் முகாமைத்துவ நிலையத்தின் ஆட்சிமன்ற உறுப்பினர், சிங்கள விளையாட்டுக் கழகத்தின் பொருளாளர், இலஙகைப் பணிப்பாளர்கள் நிலையத்தின் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கக் குழு உறுப்பினர் ஆகிய கௌரவ பதவிகளையும் அவர் வகிக்கின்றார். 

திரு. தவுச்சிர குணரத்ன கந்தம்பி

நிர்வாகப் பொறுப்பற்ற சுயாதீனப் பணிப்பாளர்

திரு. ரி.ஜி. கந்தம்பி 2020 ஏப்பிரல் 23ஆம் திகதி அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிலையம், இலங்கையின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிலையம் என்பவற்றின் சிறப்பு உறுப்பினர் ஆவார். அவர் இலங்கை வங்கியாளர்கள் நிலையத்திடமிருந்து வங்கியியல் முகமைத்துவத்தில் முதுநிலை நிறைவேற்று டிப்ளோமாவைப் பெற்றுள்ளார்.

கணக்கியல், கணக்காய்வு, நிறுவன முகாமைத்துவம், நிதி, வரி ஆகிய துறைகளில் முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை விடயங்களில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ளார். கட்டுமானம், பொறியியல், சேவைகள், வர்த்தகம், விவசாயம். சக்தி வளம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்குடன் தொடர்புடைய நிறுவனங்களில் அவர் சேவையாற்றியுள்ளார். 

நந்தா இன்வெஸ்ட்மன்ற்ஸ் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய அவர், வெளிநாடுகளிலும் கணக்காளர் என்ற முறையில் சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளையும் வகித்துள்ளார். தற்சமயம் அவர் பல தனியார் கம்பனிகளின் பணிப்பாளராகச் செயற்படுவதுடன், ரி.ஜி. கந்தம்பி அன்ட் கம்பனி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் நடத்துகின்றார்.  

திரு. ரணில் விஜேகுணவர்தன

நிர்வாகப் பொறுப்பற்ற சுயாதீனப் பணிப்பாளர்

திரு. ஆர். விஜேகுணவர்தன, 2020 மே 18ஆம் திகதி அசோஷியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் சிறப்பு உறுப்பினர் ஆவார். ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட முகாமைத்துறை முதுநிலை டிப்ளோமாவையும் இலங்கை வங்கியாளர்கள் நிலையத்தினால் வழங்கப்பட்ட திறைசேரி முதலீடு மற்றும் இடர் முகாமைத்துவ டிப்ளோமாவையும் அவர் பெற்றுள்ளார்.

திரு. ஆர். விஜேகுணவர்தன நிதி மற்றும் முகாமைத்துவக் கணக்கியல். வரி விதிப்பு, கணக்காய்வு, நிர்வாகம். பொருள் கொள்வனவு, தகவல் தொழில்நுட்பம். கணினி அமைப்பு அமுலாக்கம் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ளார். பட்டியலிடப்பட்ட பிரபல கம்பனிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் பொது மற்றும் நிறுவன முகாமைத்துவப் பதவிகளை அவர் வகித்துள்ளார். 

 

கொழும்பு டொக்யாட் பி.எல்.சி.யின் முகாமைப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயற்பட்ட அவர், அதற்கு முன்னர் அதே கம்பனியில் பிரதம நிதி அதிகாரியாகவும் பணியாற்றினார்.. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல முன்னணி நிறுவனங்களில் அவர் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரதம நிதி அதிபாரி. பொது முகாமையாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்சமயம் அவர் வேறு சில கம்பனிகளின் வியாபார ஆலோசகராகப் பணியாற்றுகின்றார்.  

Scroll to Top